02.04.09
போர்கால விதிகளை மீறும் இலங்கை அரசு: நார்வே
போர்க்கால அனைத்துலக சட்ட விதிகளை இலங்கை அரசு மீறி வருவதாக நார்வே நாடாளுமன்ற வெளியுறவு அலுவலகங்களுக்கான அமைப்பின் பிரதிநிதித் தலைவர் மாரித் நைபாள் குற்றம் சாட்டியுள்ளார்.
நார்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான இவர், இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளுமாறு நார்வேயில் செயற்படும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளையும் கோரியுள்ளார்.
இலங்கை அரசு மீது அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மிக அதிகபட்ச அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே, அந்நாட்டு அரசாங்கத்தின் உச்சக்கட்ட மனித உரிமை மீறல்களை நிறுத்த முடியும் என்றும் அனைத்துலக நாடுகளும், சிங்கள அரசாங்கமும் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களை கவனத்தில் எடுப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
