01.31.09

மகாத்மா காந்தியின் கனவை நிறவேற்றுவோம்

.... இங்கே பதியப்பட்டது செய்தி tagged , , இல் 8:16 காலை by பொதுசனம்

gandhiமகாத்மா காந்தியின் கனவை நிறவேற்றும் விதமாக காங்கிரஸை இந்தியாவிலிருந்து ஒழிப்போம். அதுதான் நாம் காந்திக்கு செய்யும் பெரிய அஞ்சலி.

Gandhi wanted to dissolve the Congress Party after independence and establish a system of direct democracy in India.

ஆதாரம்: Bhattacharyya, Buddhadeva. Evolution of the political philosophy of Gandhi. Calcutta Book House: Calcutta, 1969, pp 479

01.30.09

கண்ணீர் அஞ்சலி

.... இங்கே பதியப்பட்டது செய்தி, தமிழ் tagged , , , இல் 9:24 காலை by பொதுசனம்

இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில், சாஸ்திரி பவன் முன்பு பத்திரிக்கை நிறுவன ஊழியர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழர்கள் அனைவரின் கண்ணீர் அஞ்சலி.

தியாகி முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு

பொதுசனத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை, கிட்டத்தட்ட அவரது மரண வாக்குமூலமாக அமைந்துள்ளது.

முத்துக்குமார் விநியோகித்த துண்டு அறிக்கையின் முழு விவரம்:

muthukumarவிதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.

அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை.

தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?

கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப் பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!).

பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!

இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?

ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன்.

உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.

உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.

போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!

விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!

ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.

‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.

என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமிழழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா?

சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.

டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப் போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.

தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது.

ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?

இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?

ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் எஅடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது.

சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது.

ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது?

புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்?

தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா.

ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.

ஆயுத தளவாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி!

இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?

அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.

அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும் கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99.

01.29.09

தமிழர்களின் பொது எதிரி

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் tagged , , இல் 10:23 காலை by பொதுசனம்

காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927


ஈழத்தமிழர்கள் அழிப்பிற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம். தமிழர்களே,  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராடுவோம்.  நாம் செய்ய வேண்டியது, வரும் மக்களவைத்தேர்தலில் தமிழர்களின் துரோகிகளான காங்கிரஸ் வேட்பாளர்களை படுதோல்வி அடைய செய்யவேண்டும். அது தான் நாம் செய்ய வேண்டியது.

என் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

என் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.

01.18.09

ஏ.ஆர்.ரஹ்மானும் குளோப் விருதும்

.... இங்கே பதியப்பட்டது சினிமா, விமர்சனம் tagged , , , , இல் 12:57 மாலை by பொதுசனம்

கோல்டன் குளோப் விருது எல்லாம் வாங்கிட்டீங்க ரஹ்மான் அவர்களே. உங்களுக்கு பொதுசனத்தின் வாழ்த்துக்கள்.

எப்போ தமிழில் நல்லா இசை அமைக்கப்போறீங்க ?
தமிழில் நல்ல இசை அமைக்காட்டியும் பரவாயில்லை.
தயவுசெய்து நல்ல பழைய பாடல்களை remix என்ற பெயரில் கொலை செய்யாதீங்க.

01.12.09

விஜயகாந்த்தின் எங்கள் ஆசானை வெளியிட தடை – மக்கள் மகிழ்ச்சி

.... இங்கே பதியப்பட்டது சினிமா, செய்தி tagged , , , , இல் 11:47 காலை by பொதுசனம்

விஜயகாந்த் கதாநாயகனாகவும், ஷெரில் பிரின்டோ கதாநாயகியாகவும் நடித்து, கலைமணி டைரக்டு செய்த படம், எங்கள் ஆசான். இந்த படத்துக்கு சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்காலத் தடை விதித்தது.

இந்த இடைக்காலத் தடையைப் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் சிலர் இந்தத் திரைப்படத்திற்கு நிரந்தரத் தடை வந்தால் நல்லது என கருத்துத் தெரிவுத்தள்ளனர்.

பொதுமக்களின் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு:

  • விஜயகாந்த் நடித்த  எல்லா படங்களையும் தடை செய்தா நல்லது.
  • அப்பாடா! தமிழ்நாடு தப்பிச்சுதுடா சாமி என்று சொல்லியவர் சென்னைத்தமிழன்.
  • ennakodumai இது என்ன விஜய்காந்த் பேத்தி உடனா நிற்கிறார் . கறுப்பு எம்.ஜி. ஆர் என்று நினைப்பு பாவம் .சகிக்க முடியலை அப்பா .
  • கிரேட் எஸ்கேப் for தமிழ் மக்கள்  என்று விஜய் சொல்லியிருக்கின்றார்.
  • இந்த விஜயகாந்தவை முதலில் தமிழ் நாட்டில் இருந்து தடை செய்ய வேண்டும் என்று ஒருவர் கோபத்தோடு கருத்து சொல்லி இருக்கின்றார்.

உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

01.11.09

ஈழ விடுதலை: தமிழ்கத் தமிழரும், தமீழீழத் தமிழரும் – இந்திய அரசை நம்புவது கொலையாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கே ஒப்பாகும் – வே. ஆனைமுத்து

.... இங்கே பதியப்பட்டது விமர்சனம் tagged , , , இல் 4:45 மாலை by பொதுசனம்

ஈழ விடுதலை பற்றி, 1992க்குப் பிறகு நீறுபூத்த நெருப்பாகத் தமிழகத் தமிழரிடையே தேங்கிக்கிடந்த ஈழவிடுதலை ஆதரவு உணர்வு, 2.10.2008க்குப் பின்னர், தமிழகத்தில் எல்லாத் தரப்பினரிடமும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. இதற்கு உடனடிக் காரணராக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினரும், மாண்புமிகு தமிழக முதல்வரும் ஆவார்கள். இவர்கள் எடுத்த முன்முயற்சி – கட்சி, மாவட்டம், தேசம், பிராந்தியம் அல்லது மாநிலம் என்கிற எல்லாவற்றையும் கடந்து, இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழும் ஏழு கோடித் தமிழரையும் பிற மொழியினரையும் பற்றிக் கொண்டது.

srilanka இந்தியத் தலைநகரான புதுதில்லியில் கடந்த ஓராண்டாகத் தமிழ் இனப் பல்கலைக் கழக மாணவர்களால் தூக்கிப்பிடிக்கப் பட்ட ஈழத்தமிழர் சிக்கல், 14.11.2008 அன்று எல்லா மாநிலங் களையும் சார்ந்த மாணவர்களாலும் தூக்கிப் பிடிக்கப்பட்டது. இதற்கும் அடித்தளமாக விளங்குவோர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் பிரிவினராவர்.
தமிழக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று, அவர் அனைத்துக் கட்சியினரின் கூட்டத்தைக் கூட்டி, தக்க முடிவுகளை எடுத்து இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளின் தலையான கோரிக்கை, “ஈழத் தமிழர் பேரிலான போரை இலங்கை அரசு உடனே நிறுத்துவதற்கான அழுத்தத்தை இந்திய அரசு தரவேண்டும்” என்பது. ஆனால் இந்திய அரசு அப்படிச் செய்யவில்லை.

இதுபற்றிப் பேசுவதற்காக, முதலில் இந்தியாவுக்கு வந்த இராசபக்சேவின் தம்பி பாசில் இராசபக்சே – மகிந்த இராசபக்சேவின் தலைமை ஆலோசகர் என்கிற நிலையில் இருந்துகொண்டு, இங்குள்ளவர்களிடம் என்ன பேசினார்? “விடுதலைப் புலிகளின் பேரிலான தாக்குதலை நிறுத்த முடியாது. துன்பத்துக்கு ஆளாகும் இலங்கைத் தமிழர்களுக்கு எல்லா உதவிகளையும் இலங்கை அரசு செய்யும்” என்று மட்டுமே அவர் பேசினார்.

இந்த நிலையை மாற்றிட வழி காணுவதற்கு, “தமிழகச் சட்ட மன்றத்தில், ஈழ விடுதலை கோருவோர் பேரில் நடத்தப்படும் போரைத் தடுத்து நிறுத்திட இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு ஆவன செய்யவேண்டும்” என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் கோரினர்.
மா.பெ.பொ.க. சார்பில் 13.10.2008இல் இப்படிப்பட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எல்லாக் கட்சிகளின்கோரிக்கையையும் ஏற்று, 12.11.2008இல் சட்டமன்றத்தில் இதுபற்றிய நெடியதோர் தீர்மானத்தை நிறைவேற்றி, உணர்ச்சிமிக்க உரையாற்றினார். இதுமிகவும் வரவேற்கத்தக்கது. இதற்குமேல், இந்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காகத் தமிழ்நாட்டு அரசு எதையும் செய்திட அதிகாரம் இல்லை.
ஆனால், தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட இக் கோரிக்கையை, இதே வடிவில் அப்படியே, பிரதமர் மன்மோகன்சிங் மகிந்த இராசபக்சேவிடம் எடுத்துக் கூறினாரே அன்றி, “போரை நிறுத்துங்கள்; பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வை அளியுங்கள்” என்று அவர் இலங்கை அதிபரிடம் கூறவில்லை; பிரணாப் முகர்சியும் அப்படிக் கூறவில்லை.

இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் நான்கு ஆகும்.

1. திருமதி. பண்டாரநாயகா ஆட்சிக்காலத்தில், அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுத், தமிழர்களை ஒடுக்குவதற்காக, இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பியவர் காங்கிரசுப் பிரதமர் இந்திராகாந்தியே ஆவார். அப்போது முதல் இலங்கை இராணுவத்துக்கு எல்லா உதவிகளையும் செய்வது இந்திய அரசு.

2. செயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அவருடைய கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு 20,000 இந்தியப் படைவீரர்களையும், இராணுவ டேங்குகளையும் மற்ற இராணுவத் தளவாடங்களையும் 1987இல் அனுப்பியவர் காங்கிரசுப் பிரதமர் இராசிவ் காந்தி.

இராசிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது விடுதலைப் புலிகளால்தான் என்று குற்றஞ்சாட்டி, பிரபாகரனைப் பிடித்துத்தர அரசுப் பரிமாற்ற ஆணையும் வெளியிட்டுவிட்டு, இந்தியாவில் அமைப்புரீதியாக இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பேரில் தடையையும் விதித்து நாளதுவரை அதைக் கால நீட்டிப்புச் செய்துகொண்டு, வெளிப்படையாக இலங்கை அரசுக்கு 2005 முதல் எல்லாவகையான இராணுவ உதவிகளையும் செய்வது தான் – கல்நெஞ்சம் படைத்த பிரதமர் மன்மோகன்சிங் அரசு. எனவே தான் அங்கே போர் தொடர்ந்து நடைபெற்று விடுதலைப் புலிகள் அடியோடு அழிக்கப்படுவதற்கு எல்லாம் தந்து உதவும் இந்திய அரசு, இப்போதும் “போரை நிறுத்துங்கள்” என்றுகூறி இலங்கை அரசுக்கு மிகு அழுத்தம் தர முன்வரவில்லை; இனியும் முன்வராது.

இது இப்படியே நீடிக்குமே அன்றி, காங்கிரசுக் கட்சி ஆட்சியோ – அதைவிடக் கேவலமான பாரதிய சனதாக் கட்சி ஆட்சியோ – தமிழீழம் மலருவதை ஒருபோதும் விரும்பாது; அனுமதிக்காது என்பதையும் நாம் உணரவேண்டும்.

ஏன் இந்த இழிநிலை?

1. இந்தியாவிலுள்ள எந்த அனைத்திந்தியக் கட்சியும் “இந்தியா ஒரே தேசம்” என்பதிலிருந்து விடுபடவில்லை; இந்தியாவிலுள்ள மொழிவழி மாநிலங்ளுக்குத் தன்னாட்சி உரிமை தரவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக எந்தத் தேசியக் கட்சியுமே ஏற்றிருக்கவில்லை. இதில் எவருக்கும் அய்யம் இருக்க இடம் இல்லை.

2. தமிழகத்தில் 1920களில் விதைக்கப்பட்ட பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்வும், 1938இல் தூக்கிப்பிடிக்கப்பட்ட இந்தி ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியும்; 1945 முதல் பெரியாரால் முன்வைக்கப்பட்ட தனித்தமிழ்நாடு பிரிவினைக் கோரிக்கையும் – இந்தியா முழுகுவதற்கும் யாராலும் எடுத்துச்செல்லப்படவில்லை. இந்திய மய்ய அரசு பார்ப்பன ஆதிக்க அரசாகவே இன்றும் நீடிக்கிறது; இந்தி ஆதிக்கம் தெளிவுபட வந்துவிட்டது; மொழிவழித் தன்னாட்சிக் கோரிக்கை தமிழகத்திலேயே கேட்பாரற்றதாக ஆகிவருகிறது.

3. இந்த நிலையில் இராமேசுவரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழீழத் தமிழர்களுக்கு என்று ஒரு தனிச் சுதந்தரநாடு அல்லது ஒரு தன்னாட்சி (Autonomy) நாடு வர வழிவிட்டுவிட்டால், தெற்குக் கடல்பகுதியிலும், தமிழ்நாட்டிலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் நேரிட்டு இங்கேயும் தனிநாடு கோரிக்கை துளிர்த்துவிடும் என்று ஒரு கற்பனையை உருவாக்கிக் கொண்டு, அதன் காரண மாகவே தமிழகத் தமிழர் ஆறுகோடிப் பேரின் சார்பில் தமிழக அரசும், தமிழக முதல்வரும் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விடுத்த வேண்டுகோளை அப்படியே முன்வைக்கவும், வற்புறுத்தவும் இந்தியப் பிரதமர் முன்வரவில்லை; இனியும் அவர் முன்வரமாட்டார். அப்படியானால், அதையே முன்வைத்துத் தமிழக ஆட்சியாளர் பதவியைவிட்டு விலகத்தான் முடியும். அப்படி விலகி விடுவதால் மட்டும் இந்திய ஆட்சியில் இன்று இருப்பவர் களுக்கோ, நாளைக்கு வரப் போகிறவர்களுக்கோ ஒருசிறு இழப்பும் இல்லை.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் 57+2=59 பேர்கள். முதலில் இவர்கள் ஓர் அணியினராகச் சேரவில்லை. ஒருவேளை இவர்கள் இப்போது விலகினால் அதனால் அரசு கவிழாது. எப்போது விலகினாலும் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவீசி 60 உறுப்பினர்களின் ஆதரவை வேறு வழிகளில் ஆளும் அணி பெற்றுவிடும்.

அப்படியானால் இச்சிக்கலுக்குத் தீர்வுதான் என்ன?

இலங்கை அரசினர், ஏதோ “13ஆவது சட்டத் திருத்தம்” என்கிறார்களே, அது என்ன? என்பதுபற்றி முதலில் தமிழீழத் தமிழர்களும், தமிழீழ ஆதரவு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிந்திக்கவேண்டும்; புரிந்துகொள்ளவேண்டும். அதனால் தமிழீழத் தமிழர்க்கு உரிய சமத்துவ உரிமை வராது என்று தெரிந்த நிலையில், அய்க்கிய நாடுகள் அவைக்கும், உலக மானிட உரிமைக்காப்பு அமைப்புக்கும், உலக நீதிமன்றத்துக்கும் இச்சிக்கலை எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழீழ விடுதலையை விரும்பும் தமிழ்நாட்டுத் தமிழரும் இதே போன்று செயல்படமுன்வரவேண்டும், ஏன்?

1. இன்று உலக நாடுகளின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரசமைப்புச்சட்டம் 1997இல் இயற்றப்பட்டது. அது 19 பகுதிகளைக் கொண்டது. அவற்றுள் 15 ஆவது பகுதி, “பிராந்தியங்ளுக்கு அல்லது மாகாணங்ளுக்கு அதிகாரங்களைப் பகிர்வு செய்வது அல்லது மாற்றித் தருவது” (Devolution of Powers to Regions) என்ற தலைப்பைக் கொண்டதாகும்.

அச்சட்டம் ஒரு முன்வரைவே (a Draft) ஆகும். அது 27.03.1997இல் இலங்கை நீதி மற்றும் அரசமைப்புத் துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பெரிஸ் என்பவரால் இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப் பட்டது. அவர் 19 பகுதிகளுள் 1 முதல் 14 மற்றும் 16 முதல் 19 பகுதிகளை மட்டுமே வெளி யிட்டார். 15 ஆவது பகுதியை அவர் வெளியிடவில்லை. அது பற்றிய விவரம் பின்வருமாறு உள்ளது.

CONSTITUTION OF SRI LANKA

“Justice and Constitutional Affairs Minister Prof G.L Peris released 18 chapters of the Draft Consutitution of the Republic of Sri Lanka on March 27, 1997. Chapters released were Ch.I through XIV and XVI throuth XIX The Chapter XV THAT deals with “Devolution of Powers to Regions” was not included”

இலங்கை அரசமைப்புச் சட்ட வரைவு என்பதில், முகவுரை என்கிற பகுதிக்கு மேலே தலைப்பில் உள்ள அறிவிப்புச் செய்தி இது. இதுபற்றி அறிந்திட இலங்கை நாடாளுமன்றத்தின் தமிழ் இன உறுப்பினர்களும், இலங்கை வாழ் எல்லாத் தமிழர்களும்; தமிழகத் தமிழர்களும் முன்வரவேண்டும். இலங்கை அரசிடம் தமிழ் மாகாணங்களுக்குச் சுதந்தரம் கோருவது, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமே.

தமிழ் மாகாணங்களில் உள்ள ஏனைய தமிழர்கள் விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்திட இலங்கை அரசுக்குக் கையாள்களாக இருந்தும், இலங்கை அரசு இப்போது கிழக்கு மாகாணத்தில் இயங்கும் மாகாண அரசை அமைக்க வழி விட்டதைப் பெரிய தீர்வாகவும் ஏற்றுச் செயல்படுகின்றனர். “அரசியல் தீர்வுபற்றிப் பேசுங்கள்; போரை நிறுத்துங்கள்” என்கிற தமிழகத் தமிழரும் இதுபற்றிக் கவலைப்படவேண்டும்.

மேற்படி வரைவுச் சட்டத்தில் பகுதி I, விதி 1 என்பது :

“சிறீலங்கா ஒரு தன்னாதிபத்தியக் குடிஅரசாகும்; இது இலங்கைத் தன்னாட்சிக் குடிஅரசு என வழங்கப்படும். இலங்கைக் குடிஅரசு பிரிக்கப்படமுடியாத மாகாணங்களின் ஒன்றியமாகும்” என்றும்;

விதி 2 (2) என்பது :

“எந்த ஒரு மாகாண ஆட்சியோ அல்லது பல மாகாணங் களின் ஆட்சிகளோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கீழேகண்ட எந்த ஒன்றுபற்றியும் முன்மொழியவோ முயற்சி எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது”

(அ) “மாகாணங்களின் ஒன்றியமாக அமைந்துள்ள இலங்கைக் குடியரசிலிருந்து எந்த ஒரு மாகாணமோ அல்லது மாகாணங்களோ பிரிந்துபோக அல்லது துண்டித்துக் கொள்ள முயற்சி செய்யக்கூடாது” எனக் கூறுகின்றது.
பகுதி II விதி 7 (1) என்பது :

“இலங்கைக் குடிஅரசு பவுத்தத்துக்கு மிக முதன்மையான இடத்தை அளிப்பதுடன், புத்த சாசனத்தில் விதிக்கப்பட்டுள்ள நெறிகளைக் காப்பதும் வளர்த்தெடுப்பதும் இந்த அரசின் நீங்காக் கடமையாகும்…”

விதி – 12 (2) “இலங்கையிலுள்ள ஒருவர் இலங்கையை விட்டு வெளியேற உரிமை பெற்றவர் ஆவார்” “Every persion shell be free to leave Sri Lanka” எனக் கூறுகிறது. இலங்கை பவுத்தர்களுக்கான ஒரு நாடே ஆகும்; எவர் வேண்டுமாVனலும் இலங்கையைவிட்டு வெளியேறலாம். இது இப்படி எழுதப்படுவதற்குமுன்னரே, 1981 – 1983இல் கொடுங்கோலன் செயவர்த்தனே மேற்கொண்ட “இலங்கையி லிருந்து தமிழரை ஓடவிடுங்கள்” என்ற கோட்பாடு, இலங்கை அரசமைப்பிலேயே 1997இல் இடம்பெற்றுவிட்டது.

பகுதி IV விதி 27 என்பது :

“சிறீலங்கா அரசின் அலுவல் மொழிகளாக (Official languages) சிங்களமும், தமிழும் இலங்கும்” என்றும்;

விதி 28 என்பது :

“சிறீலங்கா அரசின் தேசிய மொழிகளாக(National languages) சிங்கள மொழியும், தமிழும், ஆங்கிலமும் இலங்கும்” என்றும் கூறுகின்றன. இலங்கையில் யாழ் பல்கலை உள்பட உயர்கல்வி மொழியாக ஆங்கிலமும்; தமிழன் வீட்டுத் திருமணப் பதிவு உள்பட சிங்களமும், தமிழனுக்கு வரும் அரசு மடல்கள் சிங்களத்திலும் உள்ளன என்பதை 2005 சூனில் அங்கு நாம் நேரில் பார்த்தோம். இன்றைய உண்மை நடப்பில், மொழி உரிமையில், இலங்கைத் தமிழர் இரண்டாந்தரக் குடிமக்களே ஆவர். எப்படி?

விதி 31 என்பது :

“அரசுப் பொது ஆவணங்கள் (Public records) தமிழில் வைத்துக் காக்கப்படும் பகுதிகளில் வாழும் எந்த ஒருவரும் விதி 30(1)இல் பத்திகள் அ, ஆ, இ, ஈ இவற்றில் கண்டுள்ளபடி, அவ் வுரிமைகளைக்கொண்டு, தான் கோரும் ஆவணத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பெறலாம்” எனக் கூறுகிறது. தமிழரின் பாரம்பரிய வாழ்விடப் பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றவும், அவர்கள் தம் தாய் மொழியான சிங்களத்தில் ஆவணம் பெறவும் – தமிழன் ஆங்கிலத்திலோ, சிங்களத்திலோ மட்டுமே ஆவணம் பெறவும் வழி செய்வது இவ்விதியாகும். இவற்றை நாம் மேற்கொண்டு விரித்தெழுத விரும்ப வில்லை. ஆனால் ஒன்று.

“மாகாணங்களுக்கு எந்த எந்த அதிகாரங்களை மாற்றித் தர இலங்கைக் குடியரசின் அரசமைப்புச்சட்ட வரைவில் திட்டமிடப்பட்டிருக்கிறது” என்பதை தீய உள்நோக்கத்துடன் இலங்கைத் தமிழர் பார்வையிலிருந்தும், தமிழகத் தமிழர் பார்வையிலிருந்தும், இந்திய அரசு – மற்றும் உலக அரசுகளின் பார்வையி லிருந்தும் வேண்டுமென்றே மறைத்துவிட்ட கொடியவர்கள் சிங்களவர்கள் என்பதை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். 39 நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை உள்ளடக்கிய “Constitution of the World” என்ற, எம்.வி. பைலீ (M.V.Pylee) தொகுத்து, 2000இல் வெளியிட்ட அரசமைப்புச் சட்டத் தொகுப்பில், இவை உள்ளன.

“மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு எத்தன்மையது” என்பதை உலகத்தின் பார்வையிலிருந்து அடியோடு மறைத்து விட்ட ஒரு நாடு இலங்கை மட்டுமே. கொடுமைக்கும், பாதிப்புக்கும், அழிப்புக்கும் உள்ளான ஈழத் தமிழர்கள் முதலில் இதை உணரவேண்டும்; இந்திய அரசுக்கும், உலக நாடுகளுக்கும் இதை நாம் உணர்த்த வேண்டும். இந்தக் கொடுங்கோல் சட்டத்தை வைத்துக்கொண்டு, உலக நாடுகள் அவையில், அண்மையில் தமிழிலேயே சொற்பொழி வாற்றி, தமிழரை அழிப்பதே அரசின் நோக்கம் என்பதை மறைத்துவிட்டு, வெற்றியோடு இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சே திரும்பினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 2008 – 2009 ஆண்டுக் கான வரவு – செலவுத் திட்டத்தை முன்மொழிந்து பேசிய அதிபர் இராசபக்சே இடையிடையே தமிழர் படும் அல்லலைக் குறிப்பிட்டுத் தமிழிலேயே பேசி நீலிக் கண்ணீர் வடித்தார்.

இந்திய மண்ணில் இருந்துகொண்டே, “இலங்கை அரசு போரை நிறுத்தாது” என்று, 13.11.2008 அன்றே வெளிப் படையாக இராசபக்சே துணிவுடன் அறிவித்துவிட்டார்.
எனவே, இந்தியாவிலுள்ள தேசியக் கட்சிகளும், பல மாநிலக் கட்சிகளும் “இலங்கைத் தமிழர் படும் துயரைத் துடையுங்கள்; தமிழக மீனவர் படும் துன்பத்துக்குத் தீர்வு காணுங்கள்” என்று மட்டுமே பேசுகின்றனர்.

“இலங்கைத் தமிழர் படும் துயரம்” என்பது என்ன?

1. ஈழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் வழியே செல்லும் பு-9 என்கிற கண்டி – யாழ் தேசியச் சாலையை 3 ஆண்டுகளுக்குமுன் இலங்கை அரசு மூடியது. அதனால் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்கும்; அரசு இராணுவத்திடம் உள்ள யாழ்ப்பாணத்துக்கும் உணவு மருந்து மற்றைய பொருள்கள் கிடைக்காமல் தமிழ் மக்களைப் பட்டினிக்கும் நோய்க்கும் ஆளாக்கியது.

2. மட்டக்களப்பு, திருக்கோணமலைப் பகுதிகளை – கருணா, பிள்ளையன் போன்ற சிங்களவர்களின் கையாள்களின் துணைகொண்டு கைப்பற்றி, அங்கு புலிகள் இயக்கத்தினர் செல்வாக்குப் பெற்ற பகுதிகளைத் தாக்கி, தமிழ் மக்களை வெளியேறச் செய்தது.

2. கிளிநொச்சியையும், முல்லைத் தீவையும் கைப்பற்றி, விடுதலைப் புலிகளை அடியோடு அழித்துத் தீரவேண்டும் என்பதற்காக – மணலாறு, முகமாலை, ஓமந்தை, வன்னி நகரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலாட் படையையும், கடற்படையையும் ஏவி விட்டு, அவர்கள் முன்னேறிச் செல்ல வழி வகுப்பதற்காக, வானூர்தி மூலம் தமிழ்ப் பொதுமக்கள் வாழும் ஊர்களின் பேரிலும், புலிகளின் மறைவிடங்களிலும் குண்டு மழை பொழிந்து, இன்றுவரை 3.5 இலக்கம் ஈழத் தமிழ் மக்கள் – பெண்டு பிள்ளை களுடன் காடுகளில் பசி, பட்டினி, நோயுடன் விலங்கு வாழ்வு நடத்திடவும் செய்தது.

இதற்கு ஒரே அடிப்படைக் காரணம் எது?

முப்படைகளைக் கொண்டு இலங்கை அரசு புலிகளின் ஆதிக்கத்திலுள்ள பகுதிகளைத் தாக்குவதுதான். அந்தத் தாக்குதல் நேற்றும் இன்றும் தொடர்ந்து நடைபெற்றிட எல்லாம் செய்வது யார்? நம் வாக்கைப் பெற்று, நம் வரிப்பணத்தை வைத்து இந்தியாவை அடக்கி ஆளும் இந்திய அரசுதான் என்பது கல்லுப்போன்ற உண்மையாகும். இந்திய அரசு இலங்கைக்கு உதவாவிட்டால், பாக்கிஸ் தானும், சீனாவும், அமெரிக்காவும் எல்லா உதவிகளையும் செய்யும் என்பது கெட்டியான உண்மை.

இந்நிலையில் அரசியல் தீர்வு வர, இலங்கையிலுள்ள தமிழின அரசியல் தலைவர்களும், தமிழீழ விடுதலை நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலக மன்றங்களுக்கு “பயங்கரவாதத்தை ஒழித்தல்” என்கிற பேரால் – தமிழின அழிப்பைச் செய்வது – இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முப்படைத் தாக்குதலின் ஒரே நோக்கம் என்பதை வலிமையாக உணர்த்தவேண்டும். இதற்கு அவர்கள் ஆயத்தமாக வேண்டும். தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதற்கு ஆயத்தமாக வேண்டும்.

காசுமீர் சிக்கலை 61 ஆண்டுகளாகத் தீர்க்க மனமில்லா மல் – துப்பில்லாமல் – அந் நாட்டை அடிமையாக வைத்திருக்கும் இந்திய அரசையும், – பார்ப்பன, இந்தி, மலையாளி உயர் அதிகார வர்க்கத்தினரின் மூளை இடும் ஆலோசனைகளைக் கட்டளை களாக ஏற்று, சொந்த மூளையின்றி நடக்கும் இந்திய அரசின் அமைச்சர்களையும்; தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் தூக்கிப் பிடிக்கும் நிலைப் பாட்டை அப்படியே நம்பும் மூடர்களாக உள்ள இந்திய அமைச்சர்களையும், இந்திய அரசையும் தமிழகத் தமிழரும், இலங்கைத் தமிழரும் இனியும் நம்புவது கொலை யாளி வீட்டில் அடைக்கலம் புகுவதற்கு ஒப்பானதே ஆகும்.

இவர்களை நாமும், இலங்கை வாழ் தமிழர்களும் நம்பினால் இன்னும் ஒரு தலைமுறைக் காலம் இனிமேலும் விடுதலைப் புலிகள் போராடவேண்டும். இந்நெடிய காலத்தில், விடுதலைப் புலிகளில் பலர் கொல்லப்படலாம். ஆனால் கொரில்லாப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை யாராலும் எப்போதும் அழிக்கமுடியாது; அது அழிக்கப்பட நாம் – தமிழ்நாட்டுத் தமிழர் கிஞ்சிற்றும் இடந்தரக் கூடாது. இது 2005இல் நாம் சுட்டிய ஒரு முடிவு. தமிழகத் தமிழர்களும், தமிழக முதல்வரும் இவ் வேண்டுகோளைக் கருத்தில்கொண்டு விரைந்து செயலாற்றிட வேண்டுகிறோம்.
வணக்கம், நன்றி.

1.12.2008 - வே. ஆனைமுத்து

நன்றி: www.keetru.com

உலகத் தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துக்கள்

.... இங்கே பதியப்பட்டது தமிழ், விமர்சனம் இல் 4:41 மாலை by பொதுசனம்

ன்றைக்குத் தமிழர்கள், `கங்கைகொண்டான்’, `கடாரம் வென்றான்’ என்பது மட்டும் பழங்கதையாகவில்லை.

இரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பும், சவாலும் கூட `பழங்கதை’ஆகிவிட்டதா?

தமிழகத்திலும் இலங்கைப் பிரச்னைக்காக இன உணர்வை வெளிப்படுத்தி உண்ணாவிரதம் இருந்தார்கள். சட்டமன்றத்தில் மத்திய அரசுக்குக் `கெடு’ விதித்தார்கள். இன்னும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையப் போகிற நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறக்கப்போவதாக வசனம் பேசினார்கள். நிதி திரட்டினார்கள். டெல்லிக்குச் `சுற்றுலா’ போய் வந்தார்கள். உணர்வு வயப்பட்டுப் பேசியவர்களைத் தூக்கிச் சிறையில் தள்ளினார்கள்.

இன உணர்வைக் காப்பதாகச் சொல்லி கவிதையும் எழுதலாம். கூட்டணி தர்மம் அதைவிட மேலோங்கித் `தண்டனை’யும் அளிக்கலாம்.

இன உணர்வுக்கு வால்; கூட்டணி உறவுக்குத் தலை.

இலங்கை ராணுவம் கிளிநொச்சியைப் பிடித்துவிட்டதாக அறிவிக்கிறது. முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள், ஒண்டியிருந்த கொஞ்சம் நிழலையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனைப் பிடிக்கும் முயற்சியில் நடக்கும் இந்த இனக் கொடூரத்தை விலகி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இலங்கை பற்றி எரியும்போது இங்குள்ள கட்சிகள் திருமங்கலத்தில் தங்களுக்குள் மோதி துணை ராணுவத்தை வரவழைக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றன.

புலிகளுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது என்பது வேறு; இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது வேறு.

இந்த இரண்டையும் சேர்த்துக் குழப்பி, ஈழத் தமிழர்களின் பிரச்னையைப் பார்க்க மறுக்கிற எதிர்நிலையில் காங்கிரஸுக்கு இங்குள்ள கட்சிகள் எந்தவிதத்திலும் சளைத்தவை அல்ல.

இல்லையென்றால் இவர்களின் மௌனத்திற்கும் செயலற்ற தன்மைக்கும், இயலாமைக்கும் என்ன அர்த்தம்?


நன்றி : குமுதம் தலையங்கம்