05.29.09
ஈழத் தமிழர்களுக்காக இந்தியா ஏன் கவலைப்படவில்லை-தினமணி’ சாடல்
ஐரோப்பாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு பதற்றப்படும் இந்தியா, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழர்களுக்காக கவலைப்படவில்லை என ‘தினமணி’ தலையங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இன்று வெளியாகியுள்ள ‘தினமணி’ தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பஞ்சாப் பற்றி எரிகிறதே, அங்கே மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குகிறதா? சமீபத்தில் பஞ்சாபில் நடக்கும் கலவரங்களைக் கேள்விப்பட்ட பலருடைய எண்ண ஓட்டமும் இதுவாகத்தான் இருக்கிறது.
பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரிகட்டிய கதையாக, எங்கோ ஐரோப்பாவில் உள்ள வியன்னாவில் நடந்த சம்பவம், இங்கே பஞ்சாபில் வன்முறையைக் கிளப்பியிருக்கிறதே, அது ஏன்? இந்தப் பிரச்னையின் பின்னணி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஜாதியத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்து சமுதாயத்தின்மீது ஏற்பட்ட அதிருப்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதங்களில் ஒன்றுதான் சீக்கிய மதம்.
மனிதனை மனிதன் ஏற்றத்தாழ்வு கூறி பாகுபடுத்துவதை எதிர்த்து அனைவரும் எல்லாம் வல்ல இறைவனின் முன் சரிசமம் என்பதையும், எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளுக்கு உருவமில்லை என்பதையும் நிலைநாட்டும் விதத்தில் குருநானக்கால் உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தின் அடிப்படை, ஆதாரம் எல்லாமே குருகிரந்த சாஹிப் என்கிற அவர்களது வேதம் மட்டுமே.
ஜாதியத்தின் தடைகளை உடைத்தெறிய மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் எப்படி வேறு சில மதங்களில் பழைய ஜாதிய கண்ணோட்டத்துடன் நடத்தப்படுகிறார்களோ அதே அனுபவம்தான் சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சந்த் ரவிதாஸ் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரலை உயர்த்தியவர். இவரது பல உபதேசங்கள் குருகிரந்த சாஹிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
உயர் ஜாதி சீக்கியர்கள் சந்த் ரவிதாஸ் குருநானக்கின் சீடராகக் கருதுகிறார்கள். ஆனால் ரவிதாஸின் சீடர்களோ அவரையே குருவாகக் கருதுகிறார்கள்.
1920-ல் மங்குராம் என்கிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஜாதி சீக்கியருக்கு எதிராக ரவிதாஸரை முன்னிறுத்தி ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நில உடைமையாளர்களாவது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது.
மங்குராமைத் தொடர்ந்து பல தாழ்த்தப்பட்ட சமுதாய இயக்கங்கள் தோன்றிவிட்டன. சச்கண்ட் என்று அழைக்கப்படும் இந்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்டவர்களை இணைப்பது மட்டுமல்லாமல், சீக்கிய மதத்திலேயே ஒரு தனி அமைப்பாகவும் கலந்துவிட்டிருக்கின்றன. சீக்கிய மதத்திலும் தேராசச்சா சௌதா, தேராசச்கண்ட் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன.
ஜாதி சீக்கியர்களின் சபையாக இருப்பது எஸ்.ஜி.பி.சி. எனப்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி. இதுதான் எல்லா சீக்கிய குருத்வாராக்களையும் இணைத்து மேலாண்மை செலுத்தும் அமைப்பு.
அமிருதசரஸ் பொற்கோவிலில் தான் இதன் தலைமையகம். ஏறத்தாழ, வாட்டிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபையைப் போன்றது இது எனலாம். இதில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் ஆங்காங்கே செயல்படுகின்றன.
அநேகமாக பஞ்சாபிலுள்ள எல்லா ஊர்களிலும் எஸ்.ஜி.பி.சி.யின் குருத்வாராவும் தாழ்த்தப்பட்டவர்களின் குருத்வாராவும் காணப்படுகின்றன.
இப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் ஜாதி சீக்கியர்களைப்போலவே வசதி பெற்றவர்களாகி விட்டனர். உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றனர். இவர்களது வளர்ச்சி தங்களுக்குச் சவாலாக அமையும் என்று கருதுகிறது எஸ்.ஜி.பி.சி.
காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் துணையுடன் இந்தத் தாழ்த்தப்பட்டவர்களின் அமைப்புகள் மீது ஜாதி சீக்கியர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதுதான் பிரச்னைக்கு அடிப்படைக் காரணமே.
முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சீக்கியர் எவரும் அரசியல் முக்கியத்துவம் பெறவில்லை.
சமீபகாலமாக காங்கிரஸ் தனது அரசியல் எதிரியான அகாலிதளத்தை வீழ்த்த இந்த தேரா அமைப்புகளைத் தூண்டி விடுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆளும் அகாலிதளத்தின் ஆதரவுடன் எஸ்.ஜி.பி.சி. இந்தத் தேரா அமைப்புகளை ஒடுக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இத்தனை நாளும் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஜாதிப் பிரச்னை இப்போது எரிமலையாக வெடித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு எளிதாக இந்த எரிமலை அடங்கிவிடாது. அரசியல் கட்சிகள் அடங்க அனுமதிக்கவும் மாட்டார்கள்.
எங்கோ வியன்னாவில் தேரா சச்கண்ட் தலைவர் நிரஞ்ஜன் தாஸ் கொலை செய்ய காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது. பிரதமர் பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 கிலோ மீட்டர் தூரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி அனாதைகளாய், சொந்த மண்ணில் அகதிகளாய் அல்லல்படுகிறார்கள். கேட்க நாதியில்லை. நமக்கும் கவலையில்லை; இது காலத்தின் கேவலமான கோலமல்லவா?
05.21.09
உண்மை
கருணாநிதிக்கும், தலைவர் பிரபாகரனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்.. கருணாநிதி குடும்பத்துக்காக தமிழர்களை பலி கொடுத்தான்.. பிரபாகரன் தமிழர்களுக்காக குடும்பத்தை பலி கொடுத்தார்…
02.17.09
தீவிரவாதிகளான தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம்
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகளான தீட்சிதர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தினால் நெய், பான்பராக் மற்றும் கோழிக்கறி விலை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
கோமாளி சுப்ரமணியனுக்கு முட்டை பிரசாதம்
அரசுக்கு எதிராகப் போராடும் தீவிரவாதிகளான தீட்சிதர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கோமாளி சுப்ரமணியனுக்கு அழுகிய முட்டை அடி.
சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வக்கீல்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.
தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.
இதுதொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.
இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது. இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.
இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.
இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது ஹாலுக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த போலீசாரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.
பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வக்கீல்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.
சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் ஹாலுக்குள் வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்குறிப்பு: “என் மீதான தாக்குதலை சும்மா விடமாட்டேன். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டீல் வழக்கு தொடருவேன்” கோமாளி சூப்பர் காமெடி.
02.13.09
ஈழப்பிரச்சனை: தமிழ் இளைஞர்(முருகதாசன்) தீக்குளித்து மரணம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் முருகதாசன் என்பவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார்.
முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
முருகதாசன்அவர்களுக்கு பொதுசனத்தின்
கண்ணீர் அஞ்சலி
இறப்பதற்கு முன்பு முருகதாசன் எழுதிய கடிதம்:







இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி!
பிரபாகரனின் நம்பிக்கைமிகு தளபதியாக இருந்து, இன்றைக்கு அவருக்கு எதிராக அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறார் கருணா. எதிரும் புதிருமான நிலை எப்போதும் யாருக்கும் ஏற்படலாம் என்பதை நிரூபிக்கும் மற்றொரு உதாரணமாக அதே இலங்கையில் சமர வீரா! ராஜபக்ஷேவின் வலது கரமாகவும், அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதான காரணகர்த்தாவாகவும் இருந்த மங்கள சமர வீரா, தற்போது அதிபருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார். இவர், ராஜபக்ஷே அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்போது ராஜபக்ஷேவின் ஆட்சியை வீழ்த்த அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அவரிடம் கேள்விகளை வைத்தோம்.
”மகிந்த ராஜபக்ஷே இலங்கையின் அதிபரா வதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக்கொண்டது ஏன்?”
”கடந்த 2005-ல் அதிபர் தேர்தல் நடைபெற்றபோது, ராஜபக்ஷேவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப் பாளராகச் செயல்பட்டேன். அவர் அதிபரானதும், எனக்கும் கேபினெட்டில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 பிற்பகுதியில்தான் எங்கள் உறவில்
கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால்… திரிகோண மலையில் நான்கு மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.
இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன். நானும் ராஜபக்ஷேவும் அதிபர் சந்திரிகா குமார துங்காவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன். 1995-ல் போல்கோடா ஏரியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது. கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது கோத்தபயவும், பசிலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது ராணுவத்தின் ‘மனஉறுதியை’க் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரி வித்தனர்.
எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006-ல் அதிபருக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.07-ல் நான் வெளியுறவுத் துறை அமைச் சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 9.2.2007-ல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷேவும் அவருடைய சகோதரர்களும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்தப் பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை…”
”நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
”சிறீலங்கா சுதந்திராக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படை யாக இருந்த ஜனநாயக சோஷலிஸக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷே ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள் கையை ஒழித்துக்கட்டிவிட்டு, ராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன!
‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற போர்வை யில் ராஜபக்ஷே ஆட்சி, எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொறுக்கி வருகிறது. காவல் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர். நீதித் துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.
கொழும்பில் உள்ள தமிழர்களை ‘வெளியாளர்கள்’ என்று சொல்லி காவல் துறை சித்ரவதை செய்கிறது. ‘இது ஒரு சிங்கள-பௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை’ என்று ஜே.ஹெச்.யு. (ஜதிக ஹெல உருமய) அமைச்சரும், ராணுவத் தளபதி ஃபொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கியப் பங்கு வகிப்ப வர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை!”
”ராஜபக்ஷே அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?”
”இலங்கையின் மக்கள்தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால் ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் ராஜபக்ஷே போரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர்அதிகாரிகளும்கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப் படுகின்றனர். இந்தப் போர், ஒரே நாட்டில் இரு இனக் குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றி பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரே ஒரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான். ராஜபக்ஷே அரசாங்கத்தின் அப்பட்டமான சிங்களப் பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகி விடுவார்கள் என்பது நிச்சயம். இதனால் இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்…”
”அப்படியென்றால், ராஜபக்ஷே மனதிலுள்ள திட்டம்தான் என்ன?”
”அதிபர் ராஜபக்ஷேவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்க வில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் ‘ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்கவேண்டாம்!’ என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை. கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு ‘ஜனநாயகத்’தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா..? அந்தக் கிழக்கு மாகாண கவுன்சிலுக்கே எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர், அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13-வது சட்டத் திருத்தத்தின்படியான அதிகாரங்கள்கூட எந்த மாகாண கவுன்சிலுக்கும் தரப்படவில்லை.
‘அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு’ என்பது சர்வதேச நெருக்குதலையும், குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000-த்தில் சந்திரிகா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைவை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.”
”த.சிவராமு, லசந்தா விக்ரமசிங்கே உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?”
”லைசென்ஸ் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள், ராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி ரத்மலானா விமான நிலையம் அருகில் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் லசந்தாவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீட்டர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும், பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி, இது போன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் சிறீலங் காவில் பல இருப்பதாகத் தெரிகிறது. ‘கே-9′ எனப்படும் இந்தக் குழு, பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். ராணுவத் தளபதியைப் பற்றிக் கட்டுரை எழுதிய கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும், மகாலட்சுமி மீது நடைபெற்ற தாக்குதலும், லசந்தா கொல்லப்பட்டதும்… இவை எல்லாம் இப்படியரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன. லசந்தா கொல்லப்படுவதற்கு முன்னர் என்னிடம், ‘ஜெனரல் ஜனகபெரேரா கோரமாகக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் அரசாங்கமே உள்ளது என்று கொலைப்படையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் கிடைத் திருக்கிறது’ என்று சொல்லி இருந்தார்.”
”ராஜபக்ஷேவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்ட்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?”
”பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே, அமெரிக்கக் குடிமகன். ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும், பசில் ராஜபக்ஷேவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்தா கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகிறோம். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ட்டனிடம் இந்தத் தொகுப்பைக் கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.
ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில், ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம். இதையெல்லாம் செய்வதற்காக என் மீதும் அரசுத் தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து, ராஜபக்ஷேவின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன்… இதில் நான் உறுதியாக இருக்கிறேன்!”
நன்றி: ஆனந்தவிகடன்
